அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தனது முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த போட்டி, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இரவு நேர ஆட்டமாக, இலங்கை மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை மகளிர் அணி சார்பாக, அணித் தலைவி சாமரி அத்தபத்து 41 ஓட்டங்களையும், ஹர்ஷிதா மாதவி 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நியூஸிலாந்து மகளிர் அணி சார்பாக ஹேலி ஜென்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 17 தசம் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.
நியூஸிலாந்து மகளிர் அணி சார்பாக, அணித் தலைவி Sophie Devine 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் சிறந்த வீராங்கனையாக சிறப்பாகப் பந்து வீசிய நியூஸிலாந்து மகளிர் அணி வீராங்கனை ஹேலி ஜென்சன் தெரிவு செய்யப்பட்டார்.
0 Comments
No Comments Here ..