தென் கொரியாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளும் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்
தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குவருகைதரும் பயணிகள் சிறப்பு மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்படுவதோடு, 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன்படி கொரிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நேற்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 246 பயணிகள் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 169 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கையில் தென் கொரியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..