18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றுகின்றார் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, அந்த மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்ட அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அவரது தூதுக் குழுவினர் நேற்று பிற்பகல் ஜெனீவாவை சென்றடைந்துள்ளனர்.

இன்றைய தினம் அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையில், 40/1 தீர்மானத்தில் இருந்து விலகும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும், 2019ஆம் ஆண்டின் 40/1 தீர்மானம் மற்றும் அதனை வலியுறுத்தி முன்னர் நிறைவேற்றப்பட்ட 2015ஆம் ஆண்டின் 30/1 மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலக இலங்கை தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், நாளை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு (High Commissioner) இதனை வாய்மொழி மூலம் அறிவிக்க உள்ளதுடன், நாளை மறு நாள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரையும் சந்திக்க உள்ளார்.

இலங்கையின் தூதுக் குழுவில் உள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசிங்ஹ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயனத் கொலம்பகே, பிரதி மன்றாடியர் நாயகம் (Deputy Solicitor General) நெரின் புள்ளே, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பிரிவுக்கான வெளியுறவு அமைச்சின் இயக்குநர் நாயகம் எம்.ஆர்.கே லீனகல உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான இடைக்கால நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மென்டிஸ் மற்றும் அதிகாரிகளும் இந்த தூதுக் குழுவினருடன் இணைந்து கொள்ள உள்ளனர்.

இதேவேளை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு (International Organisation for Migration (IOM)) ஆகியவற்றின் இயக்குனர்களை (Director Generals) சந்திக்க உள்ளதுடன், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தையும் இந்த விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. 




ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றுகின்றார் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு