18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று நீர்விநியோகத் தடை!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இன்று முற்பகல் 09 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

முற்பகல் 9 மணிக்கு ஆரம்பித்து நாளை அதிகாலை வரை 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறுகின்றது.

மாபோல,மஹபாகே,கெரவலப்பிட்டிய,வெலிசர,ஏகல,ஜாஎல,சீதுவை,கட்டுநாயக்க உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று நீர்விநியோகத் தடை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு