20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு குத்தகை அடிப்படையில் 28 வாகனங்கள்!

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு குத்தகை அடிப்படையில் 28 வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இதற்காக 33 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக, தற்போது வாடகை அடிப்படையில் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு தற்போது சுமார் 45 வாகனங்கள் மாதாந்த வாடகைக்கு பெறப்படுவதாகவும், அத்துடன் தமது தனிப்பட்ட வாகனங்களை உத்தியோகபூர்வ வாகனமாக பயன்படுத்தும் 28 அதிகாரிகளுக்கு, போக்குவரத்து கொடுப்பனவாக வருடாந்தம் பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருடாந்தம் ஒருகோடியே 60 லட்சம் ரூபா வரை இதற்காக செலவிடப்படுவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.




நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு குத்தகை அடிப்படையில் 28 வாகனங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு