கொவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை தென் கொரியாவில் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்த நாட்டின் சோல் நகரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகளுக்கு அண்மையில் தொழில்புரிந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்த நாட்டின் சோல் நகரிலுள்ள இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோம் நகரில் உள்ள இலங்கைக்கான பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..