காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது என்றும் இருக்கிறது என்றும் எப்போதும் அப்படியே இருக்கும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 43-வது அமர்வு நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியதுடன் இப்பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய வெளியுறவு அமைச்சக செயலாளர் விகாஸ் ஸ்வரூப் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து அடைக்கலம் கொடுத்து, தூண்டி விட்டு வரும் நாடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..