29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி

புதிய கொரோனா வைரஸான கோவிட் -19 க்கான தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது, ஆனால் அதை பாதுகாப்பாக வெளியிட 18 மாதங்கள் ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதை சுட்டிக்காட்டி பிரித்தானியாவின் டெய்லி மெயில் வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளவில் 3162 மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, கொரோனா வைரஸ் வைரஸால் 80,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸிற்கான தடுப்பூசி வைரஸின் மேற்பரப்பு பிளவுபடும் புரதங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மனித உயிரணுக்களை ஆக்கிரமிக்கும் ஆற்றல் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி குறித்து அமெரிக்கா ஏற்கனவே பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதோடு, அவர்களின் நிபுணர்களின் குழு "கொரோனா" பரவல் ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் டெய்லி மெய்லி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.






கொரோனா வைரசுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு