பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளதார ஒத்துழைப்புக்களுக்கான பிம்ஸ்டெக் மாநாட்டிற்கான தலைமைத்துவத்தை வழங்குவதாக இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் எம் ஸஹிதுல் இஸ்லாமிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்,
பிம்ஸ்டெக் அமைப்பின் 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பிம்ஸ்டெக் பொருளாதார மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளது,
பிம்ஸ்டெக் நிறைவேற்றதிகாரிகளின் கூட்டம் கடந்த 01 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை இலங்கையில் இடம்பெற்றதுடன் இதன் போது பிம்ஸ்டெக் மாநாடு தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது,
பிம்ஸ்டகெ் மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன,
இந்த மாநாட்டில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பிரிவில் இலங்கை தலைமைத்துவம் வழங்கவுள்ளதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு பிரிவில் பங்களாதேஷும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற பிரிவில் பூட்டானும், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவில் மியன்மாரும், பாதுகாப்பு பிரிவில் இந்தியாவும் தலைமைத்துவம் வழங்கவுள்ளன.
இதேவேளை, பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச் செயலாளர் எம் ஸஹிதுல் இஸ்லாம் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியொருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று, வௌியுறவு அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..