ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தேர்வு குழு இன்று கூடவுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை குறிப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமென நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் எம்முடன் கைகோர்த்துள்ளன.
ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்று தலைமை ஒன்றையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..