19ம் திருத்தச் சட்டம் பலவீனப்படுத்தப்படக்கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக இலங்கையில் சுயாதீன நிறுவகங்கள் சக்திமயப்படுத்தப்பட்டுள்ளன.
அதனை பலவீனப்படுத்துவது மக்களது சட்டத்தின் கீழான பாதுகாப்புக்கு பங்கமாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனித உரிமைகள் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான அணுகுமுறைகள் என்பன ஒன்றுக் கொண்டு இடைதொடர்புகளைக் கொண்டவை.
எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மற்றும் நட்டயீட்டு வழங்கல் அலுவலகம் என்பவை சக்திமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..