வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சுமார் ஏழாயிரம் பக்தர்களும் தமிழகத்தில் இருந்து சுமார் மூவாயிரம் பக்தர்களும் பங்கேற்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளமை காரணமாக தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குமாறு கச்சத்தீவு உற்சவத்தில் பங்கேற்றுள்ள பக்தர்கள் பொலிஸார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..