தற்போது உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமானசேவைகளை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடைநிறுத்தியுள்ளது,
இதனடிப்படையில் சீனாவின் பீஜிங்,ஷெங்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகியவற்றுக்கான விமானப் பயணங்களை அடுத்த மாதம் வரை தற்காலிமாக இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது,
இதனடிப்படையில் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை சீனாவுக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படவுள்ளன,
அத்துடன் சவூதி அரேபிய சிவில் விமான சேவைகள் அதிகார சபைின் பரிந்துரையின் பிரகாரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம 30 ஆம் திகதி வரை சவூதிக்கான பயணங்கள் இடைநிறுத்தப்படவுள்ளன,
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சவூதி அரேபியாவின் ரியாத்' மற்றும் தமமாம் ஆகிய பகுதிகளுக்கு தமது சேவைகளை முன்னெடுக்கின்றது,
கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடையும் பட்சத்தில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் விமானப்ட பயணங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..