20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மறுதபாண்டி ராமேஸ்வரன், ராஜதுறை ஆகியார் களமிறங்க உள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கண்டி மாவட்டத்தில் பரத் அருள்சாமி பதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் ஆகியோர் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தவிர தேசிய பட்டியலில் இரண்டு பேருக்கு பாராளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மாகாண சபையில் முக்கிய பதவிகள் வழங்க இணக்கபாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.




தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு