24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளது

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இதேவேளை, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் அனந்தி சசிதரன் போட்டியிடுவார் என சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

வன்னியில் பெண் ஒருவர் போட்டியிடுவது தொடர்பில் பேசப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, EPRLF கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக மாற்றியதால் அந்த

கூட்டணியின் தலைவர் யார் என்பது சர்ச்சையாகவுள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பதவி நிலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள்

தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவரது கருத்துப்படி,

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரனும் செயலாளராக சிவசக்தி ஆனந்தனும் உப தலைவர்களாக சுரேஷ் பிரேமசந்திரனும் பேராசிரியர் சிவநாதனும், ஶ்ரீகாந்தாவும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்புச் செயலாளர்களாக அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு