19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கல்வி அமைச்சு விடுக்கும் விசேட அறிவிப்பு!

தேசிய பாடசாலைகள் அற்ற 125 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 125 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த 125 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்படுமாயின் நாட்டிலுள்ள மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதனூடாக ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் ஆவணங்கள் குறித்து மாகாண ரீதியில் மீளாய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




கல்வி அமைச்சு விடுக்கும் விசேட அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு