22,Feb 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஐக்கியநாவிற்கும் எனது ராஜினாமாவிற்கும் தொடர்பில்லை-அம்பிகா

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குருநாதன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக அம்பிகா சற்குணநாதன் களமிறங்குகின்றார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டிற்கு பங்களிப்பு செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 26 ம் திகதி நான் எனது இராஜினாமா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்தேன், 7 ம் திகதி முதல் பதவி விலகியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதகாலமாக பதவி விலகுவது குறித்து ஆழமாக சிந்தித்து வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் தனது இராஜினாமாவிற்கும் நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற விடயங்களிற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.





ஐக்கியநாவிற்கும் எனது ராஜினாமாவிற்கும் தொடர்பில்லை-அம்பிகா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு