23,Feb 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொதுமக்களிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கான பயணத்தை முடிந்தவரை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் இன்று(9) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குழுக்களாக செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் இரத்து செய்துகொள்ள வேண்டும் என்றும் பணிப்பாளர் நாயகம் அனில் யாசிங்க மேலும் தெரிவித்தார்.

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளை தவிர்ந்து ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் 14 நாட்களுக்கு தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தம்பதிவ யாத்திரை பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு புத்தவசாசன அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் பயண ஏற்பாட்டாளர்கள் இருவர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்காலத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தம்பதிவ யாத்திரைக்கு பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் வயதானவர்கள் என்பதினால் அவர்கள் அப்பகுதியில் யாத்திரை செய்வது ஆபாத்திற்குரியது என அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.





பொதுமக்களிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு