23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அஜித் பிரசன்னவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவரை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபரான அஜித் பிரசன்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும் தொடர்ந்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவதாக கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் கடந்த தினம் பிணை கோரி மனுவொன்று அவர்களின் சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவில், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் உள்ளடங்காததால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டிருந்து.

எனினும், இன்று (10) இந்த கோரிக்கை தொடர்பில் தீர்ப்பினை அறிவித்த நீதவான் குறித்த மனுவினை நிராகரிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர்களால் குறித்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்ட விடயங்களில் நீதிமன்றத்திற்கு எவ்விதத்திலாவது அவமதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதவானால் இதன்போது இரகசிய பொலிஸாருக்கு மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதன் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. .




அஜித் பிரசன்னவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு