அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல, வைரஸ் தொற்று மற்றும் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மருத்துவ ஆலோசனை பெற முடியுமெனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இத்தாலிக்கான பயணத்தடையை அவுஸ்திரேலிய அரசு தொடர்ந்து நீட்டிப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 581ஆக அதிகரித்துள்ளதோடு, நேற்றைய தினம் மாத்திரம் 59 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4284 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..