15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ரவி, அலோசியஸ் உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வௌியேறினர்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் 5 பேர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று ஆஜராகியிருந்தனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.




ரவி, அலோசியஸ் உள்ளிட்டோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வௌியேறினர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு