23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இந்தியாவிற்கு யாத்திரை சென்றவர்களை அழைத்து வர விமானம்

இந்தியாவிற்கு யாத்திரை சென்றவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக விசேட விமானமொன்று இன்று (18) அனுப்பப்படவுள்ளது.

யாத்திரைக்காக 225 இற்கும் அதிகமானோர் புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கியுள்ளதாக புத்தசாசனம், கலாசாரம், மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாத்திரைக்கான சுமார் 850 பேர் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

இவர்களில் 225 பேர் தூதரகத்தில் ஒன்று திரண்டுள்ளதுடன், மீதமுள்ள இலங்கையர்களையும் ஒன்றுசேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

யாத்திரைக்காக சென்றவர்கள் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என புத்தசாசனம், கலாசாரம், மற்றும் மத அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




இந்தியாவிற்கு யாத்திரை சென்றவர்களை அழைத்து வர விமானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு