உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரம் குறித்து இங்கே காணலாம்.
* ஈரானில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது
* வெனிசுலாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
* சீனாவில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* நியூசிலாந்தில் புதிதாக 85 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் நாள்தோறும் 100 கோவிட்-19 மரணங்கள் நிகழ்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளதால், இதுபற்றி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
* தென் ஆப்ரிக்காவில் தேசிய அளவிலான ராணுவ லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன.
* உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிசெய்யும் வகையில் 5 ட்ரில்லியன் டாலரை உலகத் தலைவர்கள் அளிக்க முன்வந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..