23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

G20 நாடுகள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

ஐ.டீ.ஏ (IDA) நாடுகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதால் உலக சன தொகையில் நான்கில் ஒரு பகுதியும், உலக சன தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரும் கடுமையான பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன ஒன்றிணைந்து கடன் வழங்கிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி IDA நாடுகளிடமிருந்து கடன்களை வசுலிப்பதை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

IDA நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொண்டுள்ளதால் அந்தந்த நாடுகளில் உடனடி பணப்புழக்க தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு நாட்டின் நிதி தேவைகளை மதிப்பிடுவதற்கும் இந்த நடைமுறை உதவியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இவ்வாறான சலுகைகளை வழங்குவதும் நிதிச் சந்தைகளுக்கு வலுவான சமிக்ஞையை வழங்குவதும் தற்போது இன்றியமையாததாக அமையும் என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன எதிர்பார்க்கின்றன.

நிதி உதவி தேவைப்படும் 76 IDA நாடுகள் உள்ளதாக உலக வங்கி அடையாளம் கண்டுள்ளது.

பொலிவியா, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த நிலைமையில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், ஆனப்படியால் இலங்கையை தொடர்ந்தும் IDA நாடாக கருத முடியாது என உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன கருதுகின்றன

ஆனால் 2018 முதல் 2020 வரை இந்த நாடுகள் விசேட அடிப்படையில் குறிப்பிட்ட சில சலுகைகளை பெற்றுள்ளன.

ஆஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜேர்மன், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஸ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஜி20 நாடுகளாகும்.

இதில் 76 IDA நாடுகள் மேற்குறித்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இனம் காணப்பட்டுள்ளன




G20 நாடுகள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு