17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது, ​​அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிக்குழு மக்கள் தொடர்ந்து அத்தியாவசிய உணவு மற்றும் பிற பொருட்களை வீட்டிலேயே பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது எந்தவொரு நபரும் வீதிகளுக்கு வரக்கூடாது.

பணிக்குழுவால் அனுமதிக்கப்பட்ட விநியோக வாகனங்களை மட்டுமே வீதிகளில் இயக்க முடியும். ஊரடங்கு அனுமதி பத்திரம் இல்லாமல் வேறு எந்த வாகனத்தையும் இயக்க முடியாது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு நகர்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், சிறு , பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறை மற்றும் கடற்றொழில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் துறைமுக சேவைகள் பராமரிக்கப்படுகின்றன.

காவல்துறையினரும், முப்படையினரும் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு