27,Jan 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அதிகளவு ஒன்று கூடிய மக்கள்

இன்று திங்கள் கிழமை காலை ஆறு மணி முதல் பகல் இரண்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கிளிநொச்சி நகரில் வழமைக்கு மாறாக அதிகளவில் மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

கடந்த 01-04-2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு இன்று திங்கள் காலை ஆறு மணி தொடக்கம் 2 மணிவரை தளர்த்தப்பட்ட போது தங்களது அத்தியாவசி தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக நகரில் அதிகளவு மக்கள் திரண்டிருந்தனர்.

வியாபார நிலையங்கள், சந்தை, வங்கிகள்,சதொச விற்பனை நிலையம் போன்றன மக்களால் நிறைந்திருந்தன. அதிகளவு மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நகரின் மையப்பகுதியில் ஒன்று திரண்டமையால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.




கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அதிகளவு ஒன்று கூடிய மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு