06,Jul 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ் நகரில் நடமாடியவர்கள் கைதுவாகனங்கள் பறிமுதல்!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரில் இன்று (6) திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர் வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். காரணமின்றி பயணித்தவர்களை காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளனர்.

அவர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்து வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தனர்.




யாழ் நகரில் நடமாடியவர்கள் கைதுவாகனங்கள் பறிமுதல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு