உலகை தொடர்ந்து கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 19 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,000-ஐ கடந்துள்ளது. அதேவேளையில், 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் இறந்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சிங்கப்பூரில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை காலையில் வெளியிட்டார்.
0 Comments
No Comments Here ..