23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கழிவுகளை அகற்ற விசேட நடவடிக்கை எடுக்கப்படும்

மன்னார் பேசாலை பகுதியில் தேங்கிங் கிடக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் விசேட நடவடிக்கை இன்று (15) காலை இடம் பெற்றது.

குறித்த பணியில் பேசாலை பகுதியில் உள்ள அரச பணியாளர்கள் , சட்டத்தரணி, பொறியியலாளர் , ஓய்வு பெற்ற அசிரியர்கள், அதிபர்கள் ,மற்றும் சமூக சேவையாளர்கள் இணைந்து மேற்கொண்டனர்.

கொறோனா´ வைரஸ் தாக்கம் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தையடுத்து மக்கள் செறிந்து வாழும் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் நீண்ட நாட்களாக மன்னார் பிரதேச சபையினால் கழிவுப் பொருட்கள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த கழிவுப் பொருட்களை அகற்றும் பணியில் குறித்த பணியாளர்கள் இன்று (15) காலை முன்னெடுத்திருந்தனர்.

பேசாலை பொலிஸாரின் அனுமதியைப் பெற்று சுமார் 30ற்கும் மேற்பட்டவர்கள் குறித்த கழிவு அகற்றும் சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்களும் குப்பைகளை அகற்றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி அதிகமாக தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது.

மன்னார் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் குப்பை அகற்றும் வாகனங்கள் மற்றும் அதன் சுத்திகரிப்பு பணியாளர்கள் சிலரைப் பயன்படுத்தி பேசாலை கிராமத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.




கழிவுகளை அகற்ற விசேட நடவடிக்கை எடுக்கப்படும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு