03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

ரஷ்யா,ஜெர்மனி, போர்ச்சுக்கல் நாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன?

ரஷ்யாவில் மீண்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது வரை மொத்தம் அந்த நாட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசின் தரவுகளின்படி பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உள்ளது.

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 1 என்ற அளவிலிருந்து 0.75 என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதிப்புமிகுந்த நிறுவனமாக கருதப்படும் ராபர்ட் கோச் நிறுவனம் கூறியுள்ளது. ஒருவேளை தொற்றின் எண்ணிக்கை 1 என்ற அளவை தாண்டினால், மீண்டும் ஜெர்மனியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் கருதுகிறது.

போர்ச்சுகல் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நிலையை தளர்த்துவதற்கான படிநிலைகளை அந்நாடு அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பில் சிறிய கடைகள், சிகை திருத்தகங்கள் ஆகியவை வரும் திங்கள்கிழமை முதல் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என தெரிகிறது. அண்டை நாடான ஸ்பெயினை விட போர்ச்சுக்கல்லில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது.




ரஷ்யா,ஜெர்மனி, போர்ச்சுக்கல் நாடுகளின் சமீபத்திய நிலவரம் என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு