இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை 33050 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 67 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1074-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 78 விழுக்காட்டினர் வேறு ஏதாவது ஒரு உடல் நலக்குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
தற்போது வரை கொரோனா நோயாளிகள் 8,324 பேர் குணமடைந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் 25.19 % விழுக்காடாகும். 14 நாட்களுக்கு முன்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடானது 13.06 %-ஆக இருந்தது.
கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்கள் முறையே மகராஷ்டிரா,குஜராத்,டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது.
0 Comments
No Comments Here ..