12,Mar 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

குடும்ப தகராறினால் உயிரைத்தொலைத்த மாணவி!

தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு மீட்கப்பட்டவர் ரத்மில்லகெலே ஜனபதய கதியைச் சேர்ந்த நாராயணசாமி முனுசியா (வயது 16) அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவர் தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி எனவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,


குறித்த மாணவியின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இன்று ஆறு முப்பது மணியளவில் குறித்த நீர்த்தேகத்தில் குதித்துள்ளார். அதனை கண்ட பொது மகன் ஒருவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினை தேடுதல் மேற்கொண்டுள்ளனர், 9 மணியளவில் குறித்த மாணவி சடலம் மீட்கப்பட்டுள்ளார்.


மீட்கப்பட்ட சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




குடும்ப தகராறினால் உயிரைத்தொலைத்த மாணவி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு