துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான காயத்துடன் கூடிய சடலம் ஒன்று துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
32 வயதுடைய கம்பஹா, நெதுன்கம பகுதியை சேர்ந்த குறித்த நபரின் சடலம் நேற்று (18) மாலை 4 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் இத்தாலி, ஏப்ரிலியா நகரில் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடமையாற்றி நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அதன் பின்னர் அவருடைய சடலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..