30,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதான பிராந்திய முகாமையாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரி செல்லத்துரை குணபால செல்வம் அவர்கள் வடமாகாண பிரதான பிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் சாலை முகாமையாளராக கடமையாற்றிய பின்னர் இடமாற்றம் பெற்று கொழும்புக்கு சென்றிருந்தார். கடந்த பல வருடங்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே பிரதான பிராந்திய முகாமையாளராக இணைத்துக் கொள்ளப்பட்டு இருந்தார். நிர்வாக அதிகாரி குணபால செல்வம் அவர்கள் கடமையாற்றிய காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் அதிகளவான வருமானம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண பிரதான பிராந்திய முகாமையாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு