05,May 2024 (Sun)
  
CH
சமையல்

இலுப்பை பூ கிளிகட்டிக்கா

இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும்


தேவையான பொருட்கள் ;

காய்ந்த இலுப்பை பூ - 2 டம்ளர்

கறிவேப்பிலை - அரை கைபிடி

புளி - ஒரு சிறுநெல்லி அளவு

வரமிளகாய் - 1

உப்பு - ருசிக்கேற்ப


* இலுப்பை பூக்களை சுத்தம் செய்து 4 - 5 நாட்கள் வெய்யிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்ங்க.


* காய்ந்து இலுப்பை பூவில்லுள்ள வெள்ளை நிற நுனியை எடுத்து புடைத்துவிடுவும், இல்லையென்றால் அதில்லிருந்து கசப்பு சுவை வரும்ங்க.


* ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணை விட்டு அதில் வரமிளகாய், கறிவேப்பில்லை, இலுப்பை பூவை போட்டு பொன் நிறமாக வறுத்து ஆற விடவும், இத்துடன் புளி, உப்பு சேர்த்து உரலில்லிட்டு இடித்து, எல்லாம் சேர்ந்தாப் போல வரும் போது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்த பின் காய வைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும்,6 மாதம் வரை கெடாதுங்க.


* தேவைப்படும் போது புதிய தென்னை மார் குச்சிகளை, ஒரு ஜான் அளவு எடுத்து அதில் நாம் செய்து வைத்த உருண்டைகளை பதித்து சுவைக்கலாம்ங்க.


* கிளிகட்டிக்கா - அறுசுவையைக் கொண்டதுங்க,இது ஒரு பலங்காலத்து திண்பண்டம். March, April மாதங்களில் இப்பூக்கள் கிடைக்கும்ங்க.


* காசநோய், இதய நோய் உள்ளவர்கள் இலுப்பைப் பூவை உண்ணலாம். படை,சொறி உள்ளவர்கள் இப்பூவை அரைத்து தேய்த்து குளிக்க குணமாகும்ங்க.


* காய்த்த இலுப்பைப் பூவை ஊறல் போட்டு அக்காலத்தில் சோம(மது)பானம் தயாரித்து அருந்துவார்கள்.




இலுப்பை பூ கிளிகட்டிக்கா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு