03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி–இரணைமடு குளத்தில் இருந்து நீர்ப்பாசனத்திற்கான நீர் திறந்துவிடப்படும் கதவு பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இன்று உடனடியாக சீர் செய்யப்பட்டு இரணைமடு குளத்தின் நீர் விவசாயிகளுக்கு போதியளவு திறந்து விடப்பட்டுள்ளது.


கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் இம்முறை 17ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இதற்காக குளத்து நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நேற்றைய தினம் இரணைமடு குளத்தின் நீர் திறந்துவிடப்படும் கதவு பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோகம் சற்று குறைவாக காணப்பட்டது.

 

இந்த நிலையில் கடந்த சனி,ஞாயிறு அரச விடுமுறை நாட்களாக உள்ள போதும் நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக தமது பணிகளை மேற்கொண்டு நீர் விநியோகத்தை சீர் செய்துள்ளனர்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு