தமிழ்நாடு கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய ரசிகர்கூட்டத்தை தன்னகத்தே தக்கவைத்துள்ளார் நடிகை நயன்தாரா. இவரை ரசிகர்கள் அன்புடன் லேடிசூப்பர்ஸ்டார் என்று அழைத்துவருகின்றார்கள். தற்போழுது இவரின் நடிப்பில் தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குலரெண்டு காதல், மற்றும் மலையாளத்தில பாட்டு என நான்கு படங்கள் தொடர்ச்சியாக வர இருக்கின்றது .
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம்.
எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து யானை மீது சவாரி செய்தபோது எடுத்த ஒரு ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
0 Comments
No Comments Here ..