நிலவும் சீரற்ற காலநிலையினால்,ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று இரவு ஏழு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்பிரகமுவ, மத்திய, மேல் ,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் நியாகம, நெலுவ, எல்பிட்டிய, பத்தேகம, தவலம, காலி, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, வளல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, இங்கிரிய, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த பிரதேச செயலாளர் பிரிவும் மண்சரிவு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
காலி மாவட்டத்தில் நாகொட, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, தெஹம்பவிட்ட ஆகிய மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத்த, அயகம, கலவான, குருவிட்ட, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு, மண்திட்டு உடைந்து வீழ்தல், கற்கள் சரிதல், போன்ற அபாயம் காணப்படுவதனால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..