15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீரென வீட்டில் மரணமடைந்துள்ளார்.

பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் 70 வயதுடைய ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு Prostate சத்திரசிகிச்சை 2017 இல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் குருதி அழுத்தம் இருந்து வந்தமையும் அவரது மருத்துவ சான்றுகளிலிருந்து காணக் கூடியதாக உள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச். எம். றிஸ்வி உறுதிப்படுத்தினார்.

மேலும்  மரணமடைந்தவரின் ஜனாசா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு்ள்ளது. 








வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு