02,Jan 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

சீன மொழி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டார் அமைச்சர் வாசுதேவ

இலங்கை பிரஜைகள் சீன நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, சீன மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்தது என்று நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே தமிழ் மொழியை சீனா திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு சீன மொழி குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று அண்மையில் நிர்மாணிக்கப்பட்டது. அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கியூ ஸென்ஹொங் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

அந்த நினைவுப்பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீனமொழிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதுடன் அதில் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இடம்பெறவில்லை. அந்த நினைவுப்பலகையில் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டதுடன் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சீன மொழியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

சீன நிறுவனங்களிடம் நாங்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அல்லது சீன வேலைத்திட்டங்களில் நாங்கள் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எமக்கு சீன மொழித் தெரிந்திருக்க வேண்டும் என்பது மேலதிக தகுதியாக அமையும்.

அதேவேளை, அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டமூலம் என்பது அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதல்ல. அவ்வாறு எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது போல அரசாங்கத்திற்கு எந்தவொரு அவசரமும் இதில் இருக்கவில்லை.






சீன மொழி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டார் அமைச்சர் வாசுதேவ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு