யாழ்ப்பாணம், அரசடி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஐவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகளும், தனிமைப்படுத்தல் சட்டங்களும் அமுலில் உள்ள நிலையலில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..