யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 03 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய காரைநகரைச் சேர்ந்தவர் என்றும், இன்னொருவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதன்படி யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..