காலி கடற்பரப்பில் பெருமளவு ஆயுதங்கள் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
படகொன்றிலிருந்து கப்பலிற்குள் ஆயுதங்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆயுதங்களை ஏற்ற பயன்படுத்தப்பட்ட வலை அறுந்துவிழுந்தது என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
36 ஆயுதங்களும் அவற்றிக்கான வெடிபொருட்களும் கடலிற்குள் வீழ்ந்தன என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..