15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நடிகைக்கு அழைப்பெடுத்து வசமாக சிக்கிய சரத் வீரசேகர

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைதான நடிகை பியுமி ஹன்சமாலி நேற்றையதினம், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் பங்கேற்ற 15 பேர்வரை கைது செய்யப்பட்டு, தற்போது பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று புதன்கிழமை அவர்கள் கொழும்பில் வைத்து நீதிமன்ற உத்தரவின்பேரில், பொலிஸ் பஸ் வண்டியில் இவர்கள் 15 பேரும் அழைத்துச் சென்றபோது, ஊடகங்களுக்கு முன்பாக பியுமி ஹன்சமாலி இப்படி கூறியிருந்தார்.

அதாவது, உடுத்திய உடையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்கின்றனர். மாற்று உடைகள்கூட இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர்கள் பயணம் செய்யும் வழியின் இடையே அமைச்சர் சரத் வீரசேகர, பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது கவலையை கேட்டறிந்திருப்பதாக கூறப்படுகிறது.

பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும்படியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்விப்பட்டபோதிலும் அவர் அழைப்பு எடுக்கும் முன்னரே அமைச்சர் அழைப்பினை மேற்கொண்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.





நடிகைக்கு அழைப்பெடுத்து வசமாக சிக்கிய சரத் வீரசேகர

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு