23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு - கல்முனையில் துயரம்

நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார்.


க.பொ.த உயர்தர தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


மரணித்தவரின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் மூலமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.


இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு - கல்முனையில் துயரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு