பிள்ளைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக வைத்தியரை சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோருக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டு நோயினதும் பொது அறிகுறியாக காய்ச்சல் என்பதனால் அந்த அறிகுறிகள் காணப்படலாம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் நிலவும் காலநிலை காரணமாக வைரஸ் காய்ச்சல் ஒன்று பிள்ளைகளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு மேலதிகமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட கூடும் என விசேட வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..