யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் எனக் கூறி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேக நபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபருக்கு தொடர்பு எடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் தேவை எனத் தெரிவித்து ஆறுகால்மடம் பகுதிக்கு அழைத்துள்ளனர். அவரும் அதிகளவு விலைபேசி 6 மதுபானப் போத்தல்களுடன் வருகை தந்து அவற்றை சிவில் உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு விற்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..