25,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பொல்லினால் தாக்கப்பட்டு உயிரிழந்த துறவி! பொலிஸார் வெளியிட்ட காரணம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் முதியோர் இல்லத்தில் துறவியொருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


பமுனுகம, உஸ்வட்டகெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.


குறித்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்கியமையினாலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.


சம்பவம் குறித்து வெலிசறை நீதிவான் நீதிபதி விசாரணையை நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த துறவியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.


குறித்த முதியோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 18 பேர் உள்ளனர்.


அத்தகைய ஒரு முதியோர் இல்ல பராமரிப்பதில் பொருத்தமான அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், அதற்கான பதிவு பெறப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.


இந் நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   




பொல்லினால் தாக்கப்பட்டு உயிரிழந்த துறவி! பொலிஸார் வெளியிட்ட காரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு