3 மாவட்டங்களில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கொழும்பு - தலங்கம - தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விஜயமாவத்தை, ஜயகத் மாவத்தை பகுதிகளும், தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, சமனல மாவத்தை, அஞ்சல் பெட்டி சந்தி ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹன்கம கொஸ்கல தோட்டம் மற்றும் போபெத்த பகுதி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..