25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என பொலிஸ் எச்சரித்துள்ளது.


மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட 313 இடங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.


இதன்போது 605 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். குறிப்பாக வர்த்தகர்கள், திரையரங்குகள், விடுதிகள் என்பன சுகாதார துறையினரால் விடுக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்ப செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


டமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக மேல் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.


எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற மறக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.




பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு